திங்கள், 30 டிசம்பர், 2013

அனுமன் ஜெயந்தி

இராமனின் துயர்தீர்க்க
கடலைக் கடந்தாய்  
சீதையின் துயர்தீர்க்க 
கணையைக் கொடுத்தாய்
இலக்குவனின் துயர்தீர்க்க 
இமயம் சுமந்தாய்
பாண்டவர் துயர்தீர்க்க 
கொடியாய் பறந்தாய்
எந்தன் துயர்தீர்த்து
எப்பொழுதும் அருளும்  
அஞ்சனை மைந்தா அஞ்சா நெஞ்சா
வாயு புத்ரா வீர ஆஞ்சநேயா
ஜெயத்தின் உருவே ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !புதன், 25 டிசம்பர், 2013

கிறிஸ்துமஸ்

ஆட்டுவிக்கும் இறைவனாயிருந்தும்
ஆட்டினையும் அரவணைத்து
கன்னத்தில் அறைந்தாலும்
கபடமற்ற அன்பை
கள்வருக்கும் காட்ட 
போதித்து, சிலுவையில்
அறைந்தாலும் சிலிர்த்துதெழுந்த
சின்ன குழந்தைக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !திங்கள், 23 டிசம்பர், 2013

கண்ணா .. கருநீல வண்ணா ..

தர்மத்தை நிலைநாட்ட
கம்சனை வதைத்தாய்
நெறியை நிலைநாட்ட
கீதையைப் படைத்தாய்

அன்பை வெளிக்காட்டி
கோபியரைக் கவர்ந்தாய்
நற்பண்பை வெளிக்காட்டி
ராதையை மணந்தாய்

சேலை மாலையால்
திரௌபதியைக் காத்தாய்
மலர் மாலையால்
கோதையை ஈர்த்தாய்

குசேலன் குறைதீர்க்க
அவலைப் புசித்தாய்
பாண்டவர் குறைதீர்க்க
போர்க்களம் புகுந்தாய்

மார்கழித் திங்களில்
மகிழ்ந்தே படைத்தேன்
நீயருளிய பாமாலையை
உந்தன் பூமாலையாக !சனி, 14 டிசம்பர், 2013

இசை

நடுநிசியில் கொள்ளை போவது  
நம் பொருள் மட்டுமல்ல 
இசையில், நம் இதயமும்தான் ..

சனி, 7 டிசம்பர், 2013

முத்தமிழ் சுடர் !

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மறதி

இன்றே சேமிக்கிறோம்
நாளைய வீட்டிற்கு
இன்றே வருந்துகிறோம்
நாளைய வாழ்வுக்கு
இன்றே கணக்கிடுகிறோம்
நாளைய வரவிற்கு
இன்றே முடிவெடுக்கிறோம்
நாளைய பிரச்சனைக்கு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காட்சிகள் மாறும்
என்பதை மறந்து ...


திங்கள், 25 நவம்பர், 2013

நம்பிக்கை

சாலையில் முன்
செல்லும் வாகனத்தை
நம்பி பயணிக்றோம்
நம்ப மறக்கிறோம்
வாழ்க்கையில் கூடவே
வரும் நம்பிக்கையை !

சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..புதன், 20 நவம்பர், 2013

புறம்போக்கு

பயிர் இல்லா 
நிலம் மட்டும் 
புறம்போக்கு அல்ல 
யாருக்கும் உதவா 
நற்  குணமில்லா 
மனித மனமும்தான் ...

திங்கள், 18 நவம்பர், 2013

பயம்

பயம்
நடுங்க வைக்கும்
பயத்தை
நடுங்க வைக்காவிடில் !

வியாழன், 14 நவம்பர், 2013

சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே !


சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே
சாதனைகளின் நாயகனே , நீ
மைதானத்தில் இறங்கினால் மெய்மறந்தோம்
உன் கவர்-டிரைவில் கவிழ்ந்தோம்
சிக்ஸ் அடித்தால் சிலிர்த்தோம்
நூறைக் கண்டு நடனமாடினோம்
ஓய்வை அறிவித்தாய் ஓய்ந்தேபோனோம்
சரித்திரத்திலும்  எங்கள் மனதிலும்
நீங்கா வடு செய்த
சகாப்தத்தின் தொடக்கமே முடிவுற்றதே !ஞாயிறு, 10 நவம்பர், 2013

அறிவியல் முன்னேற்றம்

கடிதத்திற்கு பதில்
தொலைபேசி மட்டுமல்ல
நிலவுக்கு பதில்
வானுர்தி சுட்டி
சோற்றுக்கு பதில்
பிட்சா ஊட்டுவதும்
அறிவியல் முன்னேற்றமே !


வெள்ளி, 8 நவம்பர், 2013

வேலவா

நிறையை  நிறைத்து 
குறையைக் குறைத்து
அறிவை புகற்றி 
இருளை அகற்றி
 பொருளை அளித்து 
வறுமையை ஒழித்து 
அகத்தில் நல்ல 
பிரணவத்தை நிறுத்தி
பேரின்பத்தை ஊட்டி 
மாயையை ஓட்டி 
வாழ்வை வளமாக்கி 
வாழ்வளித்தவனே  வேலவா !


வெள்ளி, 1 நவம்பர், 2013

தீப ஒளித் திருநாள் !

பொல்லாமை வன்கொடுமை
அசுரர்கள்  வதமாகி
செல்வ ஞான
ஒளி பெருகி
இல்லாமை அறியாமை
இருள் நீங்கி
மக்கள் இனிதே
மகிழ்வோடு வாழ
தீப ஒளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள் !

வியாழன், 31 அக்டோபர், 2013

இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் ! 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நாணம்

தலைவனைக் கண்டு 
நாணி முகம் 
சிவப்பாளாம் தலைவி 
உன்  முகம் 
சிவக்கக் செய்த   
கள்வனெவனோ  வானே ?

Inline image 1

புதன், 23 அக்டோபர், 2013

கிக்

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பாலும்
வளர்ந்த  குழந்தைக்கு
வோட்காவும்  !

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அதிசயம்அதிசயங்களைத் தேடி 
அலைகிறோம் வாழ்க்கையில் ..
இப்பூமியில் உயிர் 
வாழ்தலே ஓர் 
அதிசயமென உணராமல் !   புரட்டாசி 21, 2013

வியாழன், 10 அக்டோபர், 2013

துளிர் மனமே !

புயலைக் கண்டு
மரம் பதுங்குவதில்லை
தடுத்துத் தலைநிமிர்கிறது ....
இடியைக் கண்டு
பூமி நடுங்குவதில்லை
தாங்கித் தழைக்கிறது .....
அங்ஙனமே தடையைக்
கண்டு தளர்ந்து
விடாதே மனமே
தாண்டித் துளிர் !வெள்ளி, 4 அக்டோபர், 2013

நாடகம்

நிலையில்லா வாழ்க்கை தனை
நிரந்திரம் என எண்ணி
நித்தம் களித்து இன்புறுகிறோம்
இறைவன் நடத்தும் நாடகத்தில்
நாடகத்திற்கும் முடிவு உண்டல்லோ !

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மழலை மொழி

பிறந்த குழந்தை 
பெற்றோரிடமிருந்து கற்று 
மட்டும் கொள்ளவில்லை, 
கற்றும் கொடுக்கிறது 
மழலை மொழியை !


சனி, 21 செப்டம்பர், 2013

சிக்கென ஓர் சித்த மருத்துவர் !!

சித்த மருத்துவர் சிக்கென்று  இருப்பதால் 
சில்லறையைச்  சிதற விட்டேன் பதிலுக்கு 
பில்லைக்  கொடுத்து பில்லியனைப்  புடுங்கி 
பித்துப்  பிடித்து பிதற்ற வைத்தார் !திங்கள், 16 செப்டம்பர், 2013

தூக்கம்

நேற்று நள்ளிரவில்
தூக்கம் கலைந்தது
கலைத்ததை நிந்தித்து
தூக்கத்தைப் போற்றி
சற்று சிந்தித்தேன்
நிரந்தர தூக்கமும்
பேரானந்தம் தருமோ ?


ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி

முக்கண்ணர் மைந்தேரே 
முழுமுதற் கடவுளே 
கஷ்டங்களைத் தீர்க்கும் 
கருணைமிகு கஜமுகா 
இஷ்டங்களைக் கொடுக்கும்
இனிமைமிகு இறைவா 
தும்பிக்கையினால்  நம்பிக்கையளிக்கும்
அழகுமிகு ஆனைமுகா  
வினைகளைத் தீர்க்கும் 
வீரமிகு விநாயகா  
பக்தர்களைக் காக்கும் 
பாசமிகு பிள்ளையாரப்பா 
உந்தன் பிறந்தநாளில் 
நல்லருள் வேண்டி 
வாழ்த்துப் பாடி   
வணங்குகிறேன் விக்னேஸ்வரா !வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நகை !

நடமாடும் நகைக் கடையாய்
நகர்வலம் வந்து பழகாமல்
நல் இதழில் நகையுடன்
நகர்வலம் வந்து பழகினால்
வாழ்வில் எந்நாளும் பொன்னாளே !!                                                  நகை   Vs   நகை   

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மன அமைதி

முடியணிந்த மன்னரானாலும் வாங்க  
முடியாத மன அமைதி 
முற்றும் துறந்தவருக்கு என்றும் 
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கோடி !

கோடிகளில் தினம் புரளும் 
கேடிகளை விட தெருக் 
கோடிகளைப்  சுத்தம் செய்யும் 
துப்புரவாளர் மேல் !
புதன், 14 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல்


                                                                                                                                          ஆடி 28, 2013


இன்று அடுத்த  அகவையில்  அடியெடுத்து வைக்கும்  எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு  குழப்பம் ! அதற்கு முன் ...


நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை   !

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணம் !

பிறந்த பின்
கடவுள் இவரென
அடையாளம் காட்டும்  
பெற்றோரை நம்பும் நாம் 
வளர்ந்த பின் 
துணை இவரென 
அடையாளம் காட்டும்போது
அவரை நம்ப மறுப்பதேனோ ?ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கால மாற்றம் !


பழமொழி 

கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே மெய் 

பழைய ஏற்பாடு 

ஏடுகளில் காண்பதும்  பொய் 
பறையில் கேட்பதும் பொய் 
தீர அக்கம் பக்கம்  விசாரிப்பதே மெய் 

புதிய ஏற்பாடு 

வெப்சைட்டில்   காண்பதும்  பொய்
போன் Adல் கேட்பதும் பொய் 
தீர  review  படிப்பதே மெய்  


வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தமிழ் இனி ?

அன்பு மொழியான 
அம்மா    "Mummy" ஆகும்போது 
தாய்த்தமிழ் டம்மியாகிறது  !


சனி, 13 ஜூலை, 2013

தவணை அன்பு !

தங்கத்தைத் தவணையில் குவித்துப் பழகி 
தங்கமான பெற்றோர் வயதான பின் 
தவணையில் அன்பு செலுத்தித் தவிக்க 
விடுவது வேதனை தரும் வாடிக்கையாகிவிட்டது !

புதன், 10 ஜூலை, 2013

ஆசை !

சிம் இல்லாத மொபைல் கொண்டு 
எம்ஜிஆர்  பாட்டை ரசிப்பவரை கண்டவுடன் 
காசு இல்லாத வாழ்க்கைக்  கொண்டு 
கண்டமெல்லாம் ஊர் சுற்ற ஆசை !வியாழன், 4 ஜூலை, 2013

ம(மா)க்கள் !

இம் மண்ணில் பிறந்து 
சாதிப்பதை விட்டு விட்டு 
சாதிக்காக உயிரை விடும் 
மக்கள் மக்களல்ல மாக்களே !திங்கள், 1 ஜூலை, 2013

இன்று நன்று !

நடக்கப்  போகும் நாளையை மறந்து
நிகழ்ந்து போன நேற்றைத் துறந்து
நடக்கும் இன்றில் நினைவைச் செலுத்தினால்
நித்தம் வாழ்வில்  நன்றே நடக்கும் !
செவ்வாய், 25 ஜூன், 2013

வீரவணக்கம் !


தன் நாட்டவர் துயர் துடைக்க
தம் உயிரைத் துச்சமெனக்  கருதி 
மனித பாலமாய் ஊர்தியாய் உருமாறி 
மனிதம் காக்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் !


சனி, 22 ஜூன், 2013

45 Life Lessons

1. Life isn’t fair, but it’s still good.

2. When in doubt, just take the next small step.
3. Life is too short not to enjoy it.
4. Your job won’t take care of you when you are sick. Your friends and family will.
5. Don’t buy stuff you don’t need.
6. You don’t have to win every argument. Stay true to yourself.
7. Cry with someone. It’s more healing than crying alone.
8. It’s OK to get angry with God. He can take it.
9. Save for things that matter.
10. When it comes to chocolate, resistance is futile.
11. Make peace with your past so it won’t screw up the present.
12. It’s OK to let your children see you cry.
13. Don’t compare your life to others. You have no idea what their journey is all about.
14. If a relationship has to be a secret, you shouldn’t be in it.
15. Everything can change in the blink of an eye… But don’t worry; God never blinks.
16. Take a deep breath. It calms the mind.
17. Get rid of anything that isn’t useful.  Clutter weighs you down in many ways.
18. Whatever doesn’t kill you really does make you stronger.
19. It’s never too late to be happy.  But it’s all up to you and no one else.
20. When it comes to going after what you love in life, don’t take no for an answer.
21. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don’t save it for a special occasion. Today is special.
22. Overprepare, then go with the flow.
23. Be eccentric now. Don’t wait for old age to wear purple.
24. The most important sex organ is the brain.
25. No one is in charge of your happiness but you.
26. Frame every so-called disaster with these words, ‘In five years, will this matter?’
27. Always choose Life.
28. Forgive but don’t forget.
29. What other people think of you is none of your business.
30. Time heals almost everything. Give Time time.
31. However good or bad a situation is, it will change.
32. Don’t take yourself so seriously. No one else does.
33. Believe in miracles.
34. God loves you because of who God is, not because of anything you did or didn’t do.
35. Don’t audit life. Show up and make the most of it now.
36. Growing old beats the alternative — dying young.
37. Your children get only one childhood.
38. All that truly matters in the end is that you loved.
39. Get outside every day. Miracles are waiting everywhere.
40. If we all threw our problems in a pile and saw everyone else’s, we’d
grab ours back.
41. Envy is a waste of time. Accept what you already have, not what you think you need.
42. The best is yet to come…
43. No matter how you feel, get up, dress up and show up.
44. Yield.
45. Life isn’t tied with a bow, but it’s still a gift. 
செவ்வாய், 18 ஜூன், 2013

கண்ணீர் வெள்ளம் !


சார்-தாம் நோக்கிய  யாத்திரையை 
சாவை நோக்கிய யாத்திரையாக்கியது
எங்ஙனம் நியாயம் இறைவா ? 

கண்டவரின் மனதையும் மூழ்கடித்தது  
மழை வெள்ளத்தில் மாண்டவரின் 
உறவினரது கண்ணீர் வெள்ளம் ....
விண்டவர் மீண்டும் வருவாரோ ?


Uttarakhand: Nearly 14,000 people missing, 60,000 still stranded :    June 21, 2013 

ஞாயிறு, 16 ஜூன், 2013

மதி --- மதி : ஜோதிடம்


மதியைக் கண்டு மயங்கும் மதியால், 
மதியால் புனையப்பட்ட விதியை, எங்ஙனம் 
வென்று காட்ட இயலும்  ?வெள்ளி, 14 ஜூன், 2013

மதி --- மதி : அறிவியல்


மதியைக் கண்டு மயங்கும்
மதியைக்  கொண்டு மதியை
வென்று கால்பதித்தான் மனிதன் !  புதன், 12 ஜூன், 2013

மகிழ்ச்சி !

நல்ல நிகழ்வுகளை எதிர்நோக்கி 
நாட்களை  நகர்த்துவது, நாட்டுச்சாராய 
கிக்கை விடக் கிளர்ச்சியானது ! 
திங்கள், 10 ஜூன், 2013

உழைப்பே உயர்வு !

வெயில் வாட்டி வதைக்கும் போதும் 
தன்னை வாட்டும் வறுமைக்காக கையேந்தாமல் 
இளநீர் சீவும் பார்வையற்றவரைக் கண்டபோது 
சுளீரென சுட்டது உழைப்பின் மகத்துவம் !
ஞாயிறு, 9 ஜூன், 2013

Appraisal !

குழந்தைப் பருவத்தில் பூச்சாண்டியை கண்டு பயம்
பள்ளிப் பருவத்தில் பரிட்சைக்கு போக  பயம் 
விடலைப் பருவத்தில் வீட்டு திட்டிற்கு  பயம் 
வேலைப் பருவத்திலாவது வீறுகொண்டு திரியலாம்  எனில் 
ஆப்பு அடிக்கிறார்கள் Appraisal என்ற பெயரில்  !!


வெள்ளி, 7 ஜூன், 2013

தங்க ஆசை !

வாழ்க்கை "ரன்"னில் தடைகளைக் கண்டு 
தயங்கி நிற்கும் நாம் 
Temple  "ரன்"னிலோ தங்கத்தைக் கண்டவுடன் 
தடைகளைத் தகர்த்து ஓடுகிறோம் !

Software Engineerஇன் சமகால வாழ்க்கை !

Google போலொரு பிகர் கண்டு 
Set  ஆக Sincereஆய்  படித்து 
Set  ஆனவுடன் Scene  போட்டு  
சம்பள, ஸ்டாக்  Dowry வாங்கி 
மணமான பின் மாட்டித் தவிப்பதுதான் 
Software Engineerஇன் சமகால வாழ்க்கை !
தன்னம்பிக்கை !

பிரச்சனை பேரிடியாய் இறங்கும் போதும் 
துன்ப டோர்ணடோ துவைக்கும் போதும் 
அழுகை வெள்ளம் மூழ்கடிக்கும்  போதும் 
அவநம்பிக்கையை அடிமையாக்கி தன்னம்பிகையை தலைவனாக்கி      
வீறுநடை போட்டால் வெற்றி நமதே !


Arunima Sinha lost her leg after she was thrown from a moving train two years ago has become the first female amputee to climb Everest

வியாழன், 6 ஜூன், 2013

வாழ்க்கை ......

1) வாழ்க்கை சில நேரங்களில் பாடங்களை கடுமையான முறையில் கற்றுத்  தரும் .. கடுமையால் துவண்டு விடாமல் , பாடங்களை புரிந்து படித்தோமேயானால் வாழ்க்கைத் தேர்வில் தேறி விடலாம் !

2) வாழ்க்கையில் தேவையான கவசங்களை , தேவையான நேரத்தில் பாதுகாப்பிற்காக அணிதல் மிக அவசியம் ..

* ஒரு கவசத்தை மறந்தால், மற்றவர்களுக்கு/மண்ணுக்கு பாரமாக நேரலாம் !
* மற்றொன்றை மறந்தால், மற்றவர் நமக்கு பாரமாகலாம் !

மனம் On மணம் !

"ஒரு "             பிகரை     
"இரு"             கண்களால் கண்டு   
"மூன்று "    வார்த்தை சொல்லி 
                            கரெக்ட் செய்ய கஷ்டப்படுவதை  விட ..

"ஒரு"           மனதோடு அமைதியாய் இருந்து   
"இரு"           பெற்றோர் சொல்லும் பெண்ணை 
"முன்று"  முடிச்சு போட்டு 
                           மணமுடிக்கலாம் !!

(பி.கு ) - இரண்டிலுமே அனுபவம்  இல்லை ...

புதன், 5 ஜூன், 2013

கற்ற வாழ்க்கைப்பாடம் !

வாழ்க்கை சில நேரங்களில் பூரிப்படைய வைக்கும், சில நேரங்களில் ஸ்தம்பிப்படைய   வைக்கும்.  பூரிப்படையும்போது ஏன்  எனக்கு என்று கேள்வி கேட்காத நாம் , பிரச்சனையின் பொழுது ஏன் எனக்கு மட்டும் ?என்று கேள்வி கேட்கிறோம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட முறை கூட காரணமாக இருக்கலாம். தேர்வு மதிப்பெண்கள் வெளி வரும்போது பாராட்டபடுவதை விட,  நாம் நம்மை விட அதிக மதிப்பெண் எடுத்த மற்றவர்களுடன் ஒப்பிடபடுகிறோம். இதுவே பிற்காலத்தில் எது நடந்தாலும் பிறருடன் ஒப்பிட ஒருகாரணம் ஆகி விடுகிறது. ஆனால் பிரச்னை ஏற்படும்பொழுது ஒப்பிட்டு பார்ப்பதை விட, ஏற்றுக்கொண்டு சூழ்நிலையை மாற்ற முயல்வது தான் சரியான தீர்வு. ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நாமே நமது பிரச்சனையை மனத்தளவில்  பெரிதாக மாற்றி மேலும் உழல்கிரோமே  தவிர, நன்மை எதுவும் இல்லை. ஒரு ஹிந்தி படத்தில் கதாநாயகி சொல்வாள் "நாங்கள் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சந்தோசமாக தெரிவோம், உள்ளே வர வர எங்களிடம் ஒளிந்துகிடக்கும் துக்கம் வெளிப்படும் " என்று. இது நிதர்சன உண்மை.மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது வெளியில் மட்டும் பார்க்கும் நாம், அவர்கள் அருகில் சென்று பார்க்க தவறி விடுகிறோம். அருகில் சென்றால் அவர்களுடைய துன்பமும் தெரிய வரும்.  பிரச்சனையின் பொழுது ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், நம்மை விட அதிக பிரச்சனையோடு இருப்பவர்களோடு ஒப்பிடுங்கள். நமது பிரச்னை கடுகளவு ஆகி விடும். ஒரு உலக கூற்று, "பிரச்சனை உங்கள் கட்டுக்குள் உள்ளதா ? பிறகு ஏன் பயம் ?. பிரச்னை உங்கள் கட்டுக்குள் இல்லையா தீர்வு தெரியவில்லையா ?, அப்படியனில் பயந்து என்னவாக போகிறது. தீர்வு நல்லதாகவும்  இருக்கலாம்.எனவே பிரச்சனையை கண்டு பயபடாதீர்கள்". ".  இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கருதுங்கள். இன்பத்தை தலைக்கு  ஏற்றி தலைக்கணம் ஏற்றாதீர்கள் , துன்பத்தை மனதிற்கு இறக்கி மனதை பாரமாக்காதீர்கள்  மேலே சொன்னதை ஏற்று கொண்டால் எப்பொழுதும் வாழ்கையை சிறப்பானதாக வைத்து கொள்ள முடியும்(பி .கு) : முதல் பதிவு - எழுத்து/சொல்  பிழையை பொறுக்கவும் :)