கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2013

முத்தமிழ் சுடர் !

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .






சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..



புதன், 14 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல்


                                                                                                                                          ஆடி 28, 2013


இன்று அடுத்த  அகவையில்  அடியெடுத்து வைக்கும்  எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு  குழப்பம் ! அதற்கு முன் ...


நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை   !









திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணம் !

பிறந்த பின்
கடவுள் இவரென
அடையாளம் காட்டும்  
பெற்றோரை நம்பும் நாம் 
வளர்ந்த பின் 
துணை இவரென 
அடையாளம் காட்டும்போது
அவரை நம்ப மறுப்பதேனோ ?