காலைக் காதலன் கிழக்குக்
கதிரவனின் கண்ணொளி பட்டு
மாலைக் காதலன் முழு
நிலவில் மோகம் கொண்ட
வாடைக் காதலி வஞ்சிப்
புவி மார்கழிப் பனியில்
முகம் துடைத்தெழும் அழகிற்கு
ஈடு இணை உண்டோ
கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !