வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கோடி !

கோடிகளில் தினம் புரளும் 
கேடிகளை விட தெருக் 
கோடிகளைப்  சுத்தம் செய்யும் 
துப்புரவாளர் மேல் !
புதன், 14 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல்


                                                                                                                                          ஆடி 28, 2013


இன்று அடுத்த  அகவையில்  அடியெடுத்து வைக்கும்  எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு  குழப்பம் ! அதற்கு முன் ...


நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை   !

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணம் !

பிறந்த பின்
கடவுள் இவரென
அடையாளம் காட்டும்  
பெற்றோரை நம்பும் நாம் 
வளர்ந்த பின் 
துணை இவரென 
அடையாளம் காட்டும்போது
அவரை நம்ப மறுப்பதேனோ ?ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கால மாற்றம் !


பழமொழி 

கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே மெய் 

பழைய ஏற்பாடு 

ஏடுகளில் காண்பதும்  பொய் 
பறையில் கேட்பதும் பொய் 
தீர அக்கம் பக்கம்  விசாரிப்பதே மெய் 

புதிய ஏற்பாடு 

வெப்சைட்டில்   காண்பதும்  பொய்
போன் Adல் கேட்பதும் பொய் 
தீர  review  படிப்பதே மெய்  


வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தமிழ் இனி ?

அன்பு மொழியான 
அம்மா    "Mummy" ஆகும்போது 
தாய்த்தமிழ் டம்மியாகிறது  !