வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2015

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
விந்தையான ஆசான்

பல தருணங்களில்
பரீட்சை வைத்துப் 
பாடம் நடத்தும்
சில தருணங்களில்
பாடம் மட்டும் சொல்லி   
பரிசு கொடுக்கும் 

சிற்சில நேரங்களில்
பரிசு கொடுத்துப்
பின் பாடம் நடத்தும்

தரிசைத்  தங்கமாக்கும்
தங்கத்தைத்  தரிசாக்கும்
தலை கனமானால் !


ஞாயிறு, 2 மார்ச், 2014

வாழ்க்கை

கணிக்க முடியா ஓர்
கணிதம்
விவரிக்க முடியா ஓர்
விஞ்ஞானம்
விடையறிய முடியா ஓர்
விடுகதை

அது பங்குச்சந்தை அல்ல
நேற்றைய நிலவரப்படி
இந்நொடியை கணிப்பதற்கு

அது சதுரங்கமும் அல்ல
நடக்கப்போவதை கணித்து
மாற்றி விளையாடுவதற்கு

நிலவரத்தால் நடுங்காமல்
கணிப்பால் கலங்காமல்
வாழ்வை வாழ்வோம் !






ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அதிசயம்



அதிசயங்களைத் தேடி 
அலைகிறோம் வாழ்க்கையில் ..
இப்பூமியில் உயிர் 
வாழ்தலே ஓர் 
அதிசயமென உணராமல் !   



புரட்டாசி 21, 2013

வெள்ளி, 7 ஜூன், 2013

தங்க ஆசை !

வாழ்க்கை "ரன்"னில் தடைகளைக் கண்டு 
தயங்கி நிற்கும் நாம் 
Temple  "ரன்"னிலோ தங்கத்தைக் கண்டவுடன் 
தடைகளைத் தகர்த்து ஓடுகிறோம் !





வியாழன், 6 ஜூன், 2013

வாழ்க்கை ......

1) வாழ்க்கை சில நேரங்களில் பாடங்களை கடுமையான முறையில் கற்றுத்  தரும் .. கடுமையால் துவண்டு விடாமல் , பாடங்களை புரிந்து படித்தோமேயானால் வாழ்க்கைத் தேர்வில் தேறி விடலாம் !

2) வாழ்க்கையில் தேவையான கவசங்களை , தேவையான நேரத்தில் பாதுகாப்பிற்காக அணிதல் மிக அவசியம் ..

* ஒரு கவசத்தை மறந்தால், மற்றவர்களுக்கு/மண்ணுக்கு பாரமாக நேரலாம் !
* மற்றொன்றை மறந்தால், மற்றவர் நமக்கு பாரமாகலாம் !

புதன், 5 ஜூன், 2013

கற்ற வாழ்க்கைப்பாடம் !

வாழ்க்கை சில நேரங்களில் பூரிப்படைய வைக்கும், சில நேரங்களில் ஸ்தம்பிப்படைய   வைக்கும்.  பூரிப்படையும்போது ஏன்  எனக்கு என்று கேள்வி கேட்காத நாம் , பிரச்சனையின் பொழுது ஏன் எனக்கு மட்டும் ?என்று கேள்வி கேட்கிறோம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட முறை கூட காரணமாக இருக்கலாம். தேர்வு மதிப்பெண்கள் வெளி வரும்போது பாராட்டபடுவதை விட,  நாம் நம்மை விட அதிக மதிப்பெண் எடுத்த மற்றவர்களுடன் ஒப்பிடபடுகிறோம். இதுவே பிற்காலத்தில் எது நடந்தாலும் பிறருடன் ஒப்பிட ஒருகாரணம் ஆகி விடுகிறது. ஆனால் பிரச்னை ஏற்படும்பொழுது ஒப்பிட்டு பார்ப்பதை விட, ஏற்றுக்கொண்டு சூழ்நிலையை மாற்ற முயல்வது தான் சரியான தீர்வு. ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நாமே நமது பிரச்சனையை மனத்தளவில்  பெரிதாக மாற்றி மேலும் உழல்கிரோமே  தவிர, நன்மை எதுவும் இல்லை. ஒரு ஹிந்தி படத்தில் கதாநாயகி சொல்வாள் "நாங்கள் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சந்தோசமாக தெரிவோம், உள்ளே வர வர எங்களிடம் ஒளிந்துகிடக்கும் துக்கம் வெளிப்படும் " என்று. இது நிதர்சன உண்மை.மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது வெளியில் மட்டும் பார்க்கும் நாம், அவர்கள் அருகில் சென்று பார்க்க தவறி விடுகிறோம். அருகில் சென்றால் அவர்களுடைய துன்பமும் தெரிய வரும்.  பிரச்சனையின் பொழுது ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், நம்மை விட அதிக பிரச்சனையோடு இருப்பவர்களோடு ஒப்பிடுங்கள். நமது பிரச்னை கடுகளவு ஆகி விடும். ஒரு உலக கூற்று, "பிரச்சனை உங்கள் கட்டுக்குள் உள்ளதா ? பிறகு ஏன் பயம் ?. பிரச்னை உங்கள் கட்டுக்குள் இல்லையா தீர்வு தெரியவில்லையா ?, அப்படியனில் பயந்து என்னவாக போகிறது. தீர்வு நல்லதாகவும்  இருக்கலாம்.எனவே பிரச்சனையை கண்டு பயபடாதீர்கள்". ".  இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கருதுங்கள். இன்பத்தை தலைக்கு  ஏற்றி தலைக்கணம் ஏற்றாதீர்கள் , துன்பத்தை மனதிற்கு இறக்கி மனதை பாரமாக்காதீர்கள்  மேலே சொன்னதை ஏற்று கொண்டால் எப்பொழுதும் வாழ்கையை சிறப்பானதாக வைத்து கொள்ள முடியும்



(பி .கு) : முதல் பதிவு - எழுத்து/சொல்  பிழையை பொறுக்கவும் :)