ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி

முக்கண்ணர் மைந்தேரே 
முழுமுதற் கடவுளே 
கஷ்டங்களைத் தீர்க்கும் 
கருணைமிகு கஜமுகா 
இஷ்டங்களைக் கொடுக்கும்
இனிமைமிகு இறைவா 
தும்பிக்கையினால்  நம்பிக்கையளிக்கும்
அழகுமிகு ஆனைமுகா  
வினைகளைத் தீர்க்கும் 
வீரமிகு விநாயகா  
பக்தர்களைக் காக்கும் 
பாசமிகு பிள்ளையாரப்பா 
உந்தன் பிறந்தநாளில் 
நல்லருள் வேண்டி 
வாழ்த்துப் பாடி   
வணங்குகிறேன் விக்னேஸ்வரா !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக