San Francisco லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
San Francisco லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 மார்ச், 2014

கோல்டன் கேட்

தெரியாமலா உனக்கு
"கோல்டன் கேட்"டென
பெயர் சூட்டினார்கள்
இல்லை.. இருக்காது
நிச்சயமாக இருக்காது ...

ஓல்ட் இஸ் கோல்ட்
என்ற பழமொழியை
பறைசாற்றி  நிற்கும்
புதுமொழி நீ

எத்துனை முறை
காண விழைந்தாலும்
அத்துனை முறையும்
தங்க நினைவுகளை
வார்ப்பது  நீ

கலர்க்  கனவுகளோடு
தினம் களமிறங்கும்
ஆயிரம் மாயிரம்
சிறகடிக்கும் மனங்களை
சிவப்பு கம்பளத்தில்
வரவேற்பது  நீ


இறைவன்
செம்மையாய் செதுக்கிய
சிற்பமோ நீ ?
திண்மையாய் தீட்டிய
ஓவியமோ நீ ?
காண்பவர் எவரையும்
அசராமல் கவரும்
மாயையோ நீ ?