கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் !
சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் !
தமிழ் எனது அடையாளம் !
வேலின் வேந்தனே, வள்ளி மணாளனே
மயில் வாகனனே, மனதைக் கவர்ந்தவனே
சேவற் கொடியோனே, சிந்தையில் நிறைந்தவனே
எப்பொழுதும் தவறாமல், எப்பொழுதும் வருவாய்
எப்பொழுதும் குறையாமல் , எப்பொழுதும்அருள்வாய்
சமரனே உன்னிடம், சமர்பிக்கின்றேன் என்னை !