நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வாழ்க்கை கண்ணோட்டம்

வகையாய்  மாறுகின்றது
வாழ்வின் கண்ணோட்டம்.

பம்பரமாய்  சுழலாமல்,
அவசரமாய் பறக்காமல்,
இயந்திரத்தில் மூழ்காமல்,

சில நேரங்களில்
கண்ட
சில மனிதர்களாலும்,

சில நாட்களில்
உணர்ந்த
சில நிகழ்வுகளாலும்.

திசை திருப்பின   
வாழ்வின் மீதுள்ள 
பயத்தை நன்றியாக
நடுக்கத்தை நெகிழ்ச்சியாக
ஏக்கத்தை ஏகாந்தமாக.

வேண்டுதல் நிறைவேற்றுவது
இறைவனோ இயற்கையோ
தலைவிதியோ தற்செயலோ
இக்கண வேண்டுதல் ஒன்றே!

பயத்தை பொசுக்கி
நடுக்கத்தை நசுக்கி
நன்றியை பெருக்கி
நெகிழ்ச்சியை நிலைநிறுத்துக!

புதன், 14 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல்


                                                                                                                                          ஆடி 28, 2013


இன்று அடுத்த  அகவையில்  அடியெடுத்து வைக்கும்  எனக்கு,அதனை அகவை இருபத்தெட்டு என்றழைப்பதா இல்லை ஒன்றென்று அழைப்பதா என்பதில் சிறு  குழப்பம் ! அதற்கு முன் ...


நிற்கவே முடியாதென
நினைத்த எனக்கு
நடக்க முடியுமென
நம்பிக்கையளித்த உற்றாருக்கும்
நல்ல மருத்துவர்க்கும்
நடக்கவே வைத்த
நற்கருணை இறைவனுக்கும்
நற்றமிழில் நவில்கிறேன்
கணக்கிலடங்கா நன்றிகளை   !