மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூலை, 2014

முடியா மனப் போர்

முடியாத போரில்
முட்டிக் கொள்கின்றன
உனை காணச் சொல்லி
என் கண்களும்
கடந்து போகச் சொல்லி
என் மனதும்

தற்காலிகமாய்
வெற்றி பெற்றன
சில நேரங்களில்
கண்களும்
சில நேரங்களில்
மனதும்

பல நேரங்களில்
கண்களின் வெற்றி
கணத்தில் கரைந்தது
பெண்ணே உனக்கு
பக்கத்தில் ஏற்கனவே
அடி வாங்கும்
வலியவனை கண்டவுடன்

புதன், 20 நவம்பர், 2013

புறம்போக்கு

பயிர் இல்லா 
நிலம் மட்டும் 
புறம்போக்கு அல்ல 
யாருக்கும் உதவா 
நற்  குணமில்லா 
மனித மனமும்தான் ...

வியாழன், 10 அக்டோபர், 2013

துளிர் மனமே !

புயலைக் கண்டு
மரம் பதுங்குவதில்லை
தடுத்துத் தலைநிமிர்கிறது ....
இடியைக் கண்டு
பூமி நடுங்குவதில்லை
தாங்கித் தழைக்கிறது .....
அங்ஙனமே தடையைக்
கண்டு தளர்ந்து
விடாதே மனமே
தாண்டித் துளிர் !



செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மன அமைதி

முடியணிந்த மன்னரானாலும் வாங்க  
முடியாத மன அமைதி 
முற்றும் துறந்தவருக்கு என்றும் 
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !