ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு !

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி 
என் மனதை கொள்ளை கொண்டாளே  
அவள் புன்சிரிப்பை காட்டி 

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி 
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி   

சென்றாள் அன்ன நடை காட்டி  
என் கண் அவளைப் பின் 
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி 

என்னை அவள் பார்த்த கணம் 
தென்றல் வீசியதே என்னை நோக்கி  
அவள் பார்த்த பின் நான் 
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி 

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே 
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப   ...









4 கருத்துகள்:

  1. அடடா...! என்னே ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழு வலைத்தளமும் தமிழில் இருப்பதால் கவனித்ததில்லை ! அமைப்புகளை மாற்றி விட்டேன் ! மீண்டும் நன்றி :)

      நீக்கு