வியாழன், 16 ஜனவரி, 2014

வேலின் வேந்தனே !

பூக்களை அடையா  தேனீ இல்லை 
காற்றைத் தேடா குழல் இல்லை 
கடலைச் சேரா ஆறு இல்லை 
நிலவை நேசிக்கா புலவனும் இல்லை 

வேலின் வேந்தனே, பராசக்தியின் புதல்வனே  
நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை நினையாத நாளும் இல்லை 
உன்னருளுக்கு நிகர் வேறு பொருளுமில்லை  
உன் அன்பில்லாமல் என் வாழ்க்கையுமில்லை ! 2 கருத்துகள்: