வியாழன், 14 நவம்பர், 2013

சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே !


சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே
சாதனைகளின் நாயகனே , நீ
மைதானத்தில் இறங்கினால் மெய்மறந்தோம்
உன் கவர்-டிரைவில் கவிழ்ந்தோம்
சிக்ஸ் அடித்தால் சிலிர்த்தோம்
நூறைக் கண்டு நடனமாடினோம்
ஓய்வை அறிவித்தாய் ஓய்ந்தேபோனோம்
சரித்திரத்திலும்  எங்கள் மனதிலும்
நீங்கா வடு செய்த
சகாப்தத்தின் தொடக்கமே முடிவுற்றதே !



ஞாயிறு, 10 நவம்பர், 2013

அறிவியல் முன்னேற்றம்

கடிதத்திற்கு பதில்
தொலைபேசி மட்டுமல்ல
நிலவுக்கு பதில்
வானுர்தி சுட்டி
சோற்றுக்கு பதில்
பிட்சா ஊட்டுவதும்
அறிவியல் முன்னேற்றமே !


வெள்ளி, 8 நவம்பர், 2013

வேலவா

நிறையை  நிறைத்து 
குறையைக் குறைத்து
அறிவை புகற்றி 
இருளை அகற்றி
 பொருளை அளித்து 
வறுமையை ஒழித்து 
அகத்தில் நல்ல 
பிரணவத்தை நிறுத்தி
பேரின்பத்தை ஊட்டி 
மாயையை ஓட்டி 
வாழ்வை வளமாக்கி 
வாழ்வளித்தவனே  வேலவா !


வெள்ளி, 1 நவம்பர், 2013

தீப ஒளித் திருநாள் !

பொல்லாமை வன்கொடுமை
அசுரர்கள்  வதமாகி
செல்வ ஞான
ஒளி பெருகி
இல்லாமை அறியாமை
இருள் நீங்கி
மக்கள் இனிதே
மகிழ்வோடு வாழ
தீப ஒளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள் !





வியாழன், 31 அக்டோபர், 2013

இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் ! 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நாணம்

தலைவனைக் கண்டு 
நாணி முகம் 
சிவப்பாளாம் தலைவி 
உன்  முகம் 
சிவக்கக் செய்த   
கள்வனெவனோ  வானே ?

Inline image 1

புதன், 23 அக்டோபர், 2013

கிக்

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பாலும்
வளர்ந்த  குழந்தைக்கு
வோட்காவும்  !

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அதிசயம்



அதிசயங்களைத் தேடி 
அலைகிறோம் வாழ்க்கையில் ..
இப்பூமியில் உயிர் 
வாழ்தலே ஓர் 
அதிசயமென உணராமல் !   



புரட்டாசி 21, 2013

வியாழன், 10 அக்டோபர், 2013

துளிர் மனமே !

புயலைக் கண்டு
மரம் பதுங்குவதில்லை
தடுத்துத் தலைநிமிர்கிறது ....
இடியைக் கண்டு
பூமி நடுங்குவதில்லை
தாங்கித் தழைக்கிறது .....
அங்ஙனமே தடையைக்
கண்டு தளர்ந்து
விடாதே மனமே
தாண்டித் துளிர் !



வெள்ளி, 4 அக்டோபர், 2013

நாடகம்

நிலையில்லா வாழ்க்கை தனை
நிரந்திரம் என எண்ணி
நித்தம் களித்து இன்புறுகிறோம்
இறைவன் நடத்தும் நாடகத்தில்
நாடகத்திற்கும் முடிவு உண்டல்லோ !