வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

பூவுலகில் காதல்
பூ பூக்காவிடில் ...

பூக்களின் விலையோ
பாதியாய்க் குறையும்
மன்மதனின் அம்போ
மலையாய்க் குவியும்

தொலைபேசி தொல்லையில்லாமல்
தொலைந்தே போகும்
அலைபேசி அழைப்பில்லாமல்
அழிந்தே போகும்


பைக்கின் பின்புறம்
பொலிவிழந்து போகும்
துப்பட்டா துப்பில்லாமல்
மறைந்து போகும்

கொஞ்சும் புது
தமிழ் சொற்கள்
காற்றோடு கரையும்
கடற்கரையில் சுண்டல்
சுவடில்லாமல் மறையும்

சிலரின் தூக்கம்
சத்தமில்லாமல் கழியும்
பல பெற்றோரின்
வேலை சிலமடங்காகும்2 கருத்துகள்:

 1. இன்றைக்கு இப்படித்தான் ஆகி விட்டது...!

  அன்பு தினம் - என்றும் வேண்டும்...
  தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தொலைஞ்சு போவுது ,பூத்து தொலைக்கட்டும் !

  பதிலளிநீக்கு