தங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மார்ச், 2014

சொக்கத் தங்கம் !

தந்தையின் அன்பு
தாயின் உடலில்
சேமிப்பாய் சேர்ந்து

சொர்கக் கருவில்
     வட்டியின் குட்டியாய்

வேகமாய் வளர்ந்த
சொக்கத் தங்கத்தின்
சொச்சம் நாம் 






சனி, 13 ஜூலை, 2013

தவணை அன்பு !

தங்கத்தைத் தவணையில் குவித்துப் பழகி 
தங்கமான பெற்றோர் வயதான பின் 
தவணையில் அன்பு செலுத்தித் தவிக்க 
விடுவது வேதனை தரும் வாடிக்கையாகிவிட்டது !

வெள்ளி, 7 ஜூன், 2013

தங்க ஆசை !

வாழ்க்கை "ரன்"னில் தடைகளைக் கண்டு 
தயங்கி நிற்கும் நாம் 
Temple  "ரன்"னிலோ தங்கத்தைக் கண்டவுடன் 
தடைகளைத் தகர்த்து ஓடுகிறோம் !