வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஓ காதல் கண்மணி !

என் சாப்ட்வேர் மனதில்
வைரஸாய் நுழைந்து
ஹார்ட்வேர் மூளையை
ஹக் செய்தவளே

என் சென்சார் கண்களை
குழம்பச் செய்தவளே
மின்சார பேச்சை
மழுங்கச் செய்தவளே


உன் சிரிப்பின்
ஒளியை சேமித்தேன்
ஹார்ட்டிஸ்க்காய் மாறி

வளைவுகளை வகை
வகையாய் அளந்தேன்
கேமராவாய் மாறி

விழி ரிமோட்டிற்கு
விதவிதமாய் ஆடினேன்
கைப்பொம்மையாய் மாறி

மாறி மாறி
உருமாறினாலும் உன்
மனம் மாறவில்லையே
என் காதல் கண்மணியே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக